search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vishnu durgai"

    சிங்கிரிக்குடி தலத்தில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கு பெண்கள் தாலிச்சரடு கட்டி வழிபடுகிறார்கள். இதன் மூலம் பெண்களுக்கு தடைகள், தோஷங்கள் விலகி உடனே திருமணம் கைக்கூடும் என்பது ஐதீகமாகும்.
    சிங்கிரிக்குடி தலத்தில் 16 கை நரசிம்மருக்கு எந்த அளவுக்கு ஆற்றலும், அருளும் உள்ளதோ அதே அளவுக்கு அந்த கோவிலில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கும் ஆற்றல் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த விஷ்ணு துர்க்கை சன்னதி 5 நிலை ராஜ கோபுரத்தை கடந்து ஆலயத்திற்குள் நுழைந்ததும் இடது பக்கத்தில் முதலில் இருப்பதை பார்க்கலாம்.

    மிக சிறிய சன்னதியான இங்கு விஷ்ணு துர்க்கை நடு நாயகமாக வீற்றிருக்கிறாள். அவளுக்கு பெண்கள் மஞ்சள் கயிற்றில் தாலிச்சரடு கட்டி வழிபடுகிறார்கள். இதன் மூலம் பெண்களுக்கு தடைகள், தோஷங்கள் விலகி உடனே திருமணம் கைக்கூடும் என்பது ஐதீகமாகும்.

    விஷ்ணு துர்க்கை சன்னதி முன்பு வேப்பமரம் ஒன்று இருக்கிறது. அந்த மரத்தில் நிறைய பேர் குழந்தை வரம் வேண்டிய துணியால் தொட்டில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். விஷ்ணு துர்க்கை முன்பு மனதார பிரார்த்தனை செய்துவிட்டு தொட்டில் கட்டினால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஏராளமான பெண்களின் அனுபவமாகும்.
    ×