என் மலர்
நீங்கள் தேடியது "village people affect"
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேர்வைக்காரனூரில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வந்தது. குடும்பத்துக்கு ஒருவர் முதல் இருவர் வரை இக்காய்ச்சலால் அவதிப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இது குறித்து வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நடமாடும் மருத்துவ குழு மூலம் கடந்த 2 நாட்களாக அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதும் நோயின் தீவிரம் குறையவில்லை.
இதனால் சேர்வைக்காரனூரைச் சேர்ந்த கமலா (20), லெட்சுமி (25), பழனிச்சாமி (58) உள்பட 15-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு எந்தவித காய்ச்சல்? என டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட கிராமத்தில் மேலும் காய்ச்சல் பரவாமல் இருக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.






