search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Venkaiah Naidu daughter"

    கோவிலில் சிலைகளை திருடியவர்கள் தாமாகவே முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மகள் கூறியுள்ளார். #IdolSmuggling

    தஞ்சாவூர்:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் மனைவி உஷா, மகள் தீபா மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி, திங்களூர் கைலாசநாதர் கோவில், மற்றும் ஆலங்குடி குரு கோவில்களில் தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து தஞ்சாவூர் பெரிய கோவிலில் அவர்கள் தரிசனம் செய்தனர். கோவிலில் பெருவுடையார், பெரிய நாயகி அம்மன் சன்னதிகளில் இன்று காலை தரிசனம் செய்தனர்.

    மேலும் கோவிலில் இருந்த மாமன்னன் ராஜராஜ சோழன் சிலை, லோகமாதேவி ஆகியோர் சிலைகளையும் பார்வையிட்டனர்.

    இதன்பின்னர் வெங்கையா நாயுடுவின் மகள் தீபா , நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை பெரிய கோவில் அற்புதமான கோவிலாகும். வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவரும் அதிக செலவு செய்து வெளிநாடுகளில் உள்ள வரலாற்று சிறப்பு இல்லாத கோவில்களை பார்வையிட்டு வருகிறார்கள்.

    ஆனால் தஞ்சை பெரிய கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. பழமை வாய்ந்த இந்த கோவிலை அனைவரும் பார்வையிட வேண்டும். இங்குள்ள சிலைகள், ஓவியங்கள் கலைநயத்துடன் உள்ளன.

     


    சோழர்களும், நாயக்கர்களும் இக்கோவிலை குறுகிய காலத்தில் கட்டியுள்ளனர். சோழர்கள் கம்போடியாவில் பிரமாண்ட கோவிலை கட்டியுள்ளனர். கோவில் சிலைகள் தனிமனிதர்களுக்கு சொந்தமானதல்ல. அவை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சொந்தமானவை.

    சிலைகள் கடத்தலில் இந்தியர்கள் ஈடுபட மாட்டார்கள். சிலைகளை திருடுவது தவறு. கோவிலில் சிலைகளை திருடியவர்கள் மற்றும் வைத்திருப்பவர்கள் தாமாகவே முன்வந்து ஒப்படைக்க வேண்டும்.

    பிரதமர் மோடி கூறியது போல் அவரவர் வேலையை அவரவர் வேலையை செய்தால் குற்றங்கள் குறையும்.

    சபரிமலை கோவிலுக்கு கலாச்சாரத்தை மதிக்கும் பெண்கள் யாரும் செல்ல மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IdolSmuggling

    ×