search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellotam"

    • குழாய் பதிக்க தனியாரின் நிலத்தை கையப்படுத்த வேண்டியுள்ளது.
    • 98.5 கி.மீ., தூரத்துக்கு தனியாருக்கு சொந்தமான நிலங்களில் குழாய் பதிக்கப்படுகிறது.

    அவினாசி : 

    கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டம் சார்ந்து 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணி நடந்து வருகிறது. அடுத்த மாதம் 15-ந்தேதி பொங்கல் அன்று வெள்ளோட்டம் பார்க்க நீர்வளத்துறை திட்டமிட்டது.

    சமீபத்தில், அமைச்சர் முத்துசாமி, தைப்பொங்கல் நாளில் திட்டம் நிறைவேறும் என ஈரோட்டில்கூறியிருந்தார். அதே சமயம்அமைச்சர் துரைமுருகன், திட்டம் கடந்த ஆட்சியில் அவசரமாக துவங்கப்பட்டு முடிக்காமல் சென்று விட்டனர்.

    ஒரு குளத்தில் இருந்து மற்றொரு குளத்துக்கு தண்ணீரை குழாயில் எடுத்து செல்ல வேண்டியுள்ளது.

    குழாய் பதிக்க தனியாரின் நிலத்தை கையப்படுத்த வேண்டியுள்ளது. முதல்கட்ட பணி முடிந்த பின் அடுத்தகட்ட பணி துவங்கும் எனக் கூறியது அப்பகுதி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், அத்திக்கடவு திட்டத்தில் மொத்தம் 1,065 கி.மீ., நீளத்துக்கு பிரதான குழாய் பதிக்கும் பணி நடக்கிறது.

    இதில் 98.5 கி.மீ., தூரத்துக்கு தனியாருக்கு சொந்தமான நிலங்களில் குழாய் பதிக்கப்படுகிறது. அவிநாசி மண்டலத்தில் 17 கி.மீ., தூரத்துக்கு ரப்பர் குழாய் பதிக்கப்பட வேண்டியுள்ளது.

    பவானி பகுதியில் 300 மீ., நீளத்துக்கு இலகு ரக குழாய் பதிக்கும் பணி நிலுவையில் உள்ளது. பவானி பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் குழாய்களில் வெல்டிங் உள்ளிட்ட பணிகள் தாமதமாகின்றன.

    பணியில் எந்தவொரு நிலுவையும் இல்லாமல் முழுமையடைந்த பின் வெள்ளோட்டம் பார்க்க நீர்வளத்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என்றனர்.

    ×