என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore Womens Jail"

    வேலூர் பெண்கள் ஜெயிலில் செல்போன்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஜெயிலில் உள்ளதா என்பது குறித்து போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
    வேலூர்:

    வேலூர் பெண்கள் ஜெயிலில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி உள்பட ஏராளமான பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் சிறை துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, வேலூர் டவுன் டி.எஸ்.பி. ஸ்ரீதர் மற்றும் அதிரடிப்படை பெண் போலீசார் 50 பேர் இன்று காலை பெண்கள் ஜெயிலுக்குள் அதிரடியாக நுழைந்தனர். கைதிகள் அறைகள், மற்றும் ஜெயில் வளாகத்தில் உள்ள கட்டிடங்கள், மரங்கள் இருக்கும் பகுதிகளில் சோதனையிட்டனர்.

    செல்போன்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஜெயிலில் உள்ளதா என்று தேடினர். 2 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.

    இது வழக்கமான சோதனை தான். 2 மணி நேரம் நடந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    ×