என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore S.P. A snake that entered the bungalow was caught"

    • தோட்டத்திற்குள் உள்ள புதரில் சென்று மறைந்தது
    • தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் வேலப்பாடியில் உள்ள வேலூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள பங்களாவில் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.

    இந்த பங்களா வளாகத்தில் தோட்டம் உள்ளது. இன்று காலை எஸ்.பி. பங்களா வளாகத்திற்குள் பெரிய சாரைப்பாம்பு ஒன்று புகுந்தது.அங்கிருந்த பாதுகாவலர்கள் பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர். அதற்குள் பாம்பு தோட்டத்திற்குள் உள்ள புதரில் சென்று மறைந்தது.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    புதர் பகுதியில் மறைந்திருந்த சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர். பாம்பு வனத்துறை னரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்பு பாதுகாப்பாக காட்டில் விடப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    ×