என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vellore prison"

    வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி சி.டி.மணி மீண்டும் கொலை வழக்கில் கைது செய்யப்படுகிறார். பிடிவாரண்டு நிலுவையில் இருந்ததால் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
    சென்னை:

    தேனாம்பேட்டையை சேர்ந்தவர் ரவுடி சி.டி.மணி.

    இவர் மீது, கொலை, கொலை முயற்சி, மிரட்டல், அடிதடி உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. சமீபத்தில் கானத்தூரில் இவரை போலீசார் கைது செய்தனர்.

    பயங்கர ஆயுதங்கள் வைத்து இருந்ததாக கூறி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சி.டி.மணி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    2012-ம் ஆண்டு கோட்டூர்புரம் பிள்ளையார் கோவில் அருகே கார்த்திக் என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரவுடி சி.டி.மணி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வெளிவந்த பின்னர் கடந்த 5 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை.

    இது தொடர்பாக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, சி.டி.மணியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோட்டூர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, வேலூர் ஜெயிலில் இருக்கும் சி.டி.மணியை மீண்டும் கைது செய்தார். இதற்கான ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கோட்டூர்புரம், கொலை வழக்கு தொடர்பாக, ரவுடி சி.டி.மணியை வருகிற 15-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். #tamilnews
    ×