search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vegetables prices fall"

    கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் விலை வீச்சி அடைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை:

    கோவை மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும், கேரட், உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் நீலகிரி மாவட்டத்தில் இருந்தும், தக்காளி, கத்தரிக்காய் பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் கோவை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கோவை மார்க்கெட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். அங்கு ஏற்பட்ட வெள்ளபெருக்கு,ஓணம் பண்டிகை ரத்து செய்யப்பட்டதன் காரணமாக கோவை மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளது. தற்போது ஒரு நாளைக்கு 250 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் கோவை மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    மொத்த விலையில் கடந்த வாரம் ரூ. 20-க்கு விற்பனையான பெரிய வெங்காயம் விலை குறைந்து ரூ 12 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மார்க்கெட்டில் 500 முதல் 600 டன் வரை தேக்கம் அடைந்துள்ளது. ரூ. 40-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் ரூ.22-க்கும், ரூ. 45-க்கு விற்பனையான பீன்ஸ் ரூ. 15-க்கும், ரூ. 40-க்கு விற்பனையான கேரட் ரூ. 35-க்கும், ரூ. 20-க்கு விற்பனையான முட்டைகோஸ் ரூ. 10-க்கும், ரூ. 25-க்கு விற்பனையான தக்காளி ரூ. 10-க்கும், ரூ. 20-க்கு விற்பனையான கத்தரிக்காய் ரூ. 15-க்கும், ரூ. 35-க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ. 10-க்கும், ரூ. 20-க்கு விற்னையான முள்ளங்கி ரூ.10-க்கும், ரூ. 40-க்கு விற்பனையான முருங்கைகாய் ரூ. 20-க்கும், ரூ. 30-க்கு விற்பனையான உருளைகிழங்கு ரூ. 20-க்கும்,ரூ. 30-க்கு விற்பனையான பச்சை மிளகாய் ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகள் விலை வீச்சி அடைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ×