என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vegetable traders"

    • மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் தொடர் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.
    • இடமாற்றத்தை ஏற்கக்கூடாது என கருத்து தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரிய மார்க்கெட் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்காக பெரியமார்க்கெட்டை தற்காலிகமாக ரோடியர் மில் திடலுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அங்குள்ள வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் தொடர் போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளனர்.

    இதனிடையே காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று மார்க்கெட் இடமாற்றம் குறித்து வியாபாரிகளிடம் கருத்து கேட்டனர். இதில் காய்கறி வியாபாரிகள், பூ வியாபாரிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பெரும்பாலான வியாபாரி கள், இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கடன் பெற்று தொழில் செய்வதாகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் தற்காலிக கடைகளில் பொருட்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்றும் தெரிவித்தனர்.

    மேலும் அரசால் திட்ட மிட்டபடி குறித்த காலத்திற்குள் புதுப்பித்து தர முடியாது. ஏற்கனவே இடிக்கப்பட்ட நெல்லித்தோப்பு பணிகள் தொடங்கப்படவே இல்லை. அண்ணா திடல் பணி முடிவடையவில்லை.

    எனவே வருடக்கணக்கில் தற்காலிக இடத்தில் மார்க்கெட் இருக்க வேண்டியதிருக்கும். எனவே இடமாற்றத்தை ஏற்கக்கூடாது என கருத்து தெரிவித்தனர்.

    திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை காய்கறி வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் காந்தி மார்க்கெட் முன்பு மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து மார்க்கெட் வெளியே தரையில் கடை வைத்திருந்த அனைவரும் அகற்றப்பட்டனர். மேலும் அப்பகுதியில் மீண்டும் கடை வைக்க கூடாது என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த காய்கறி வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், படிப்பறிவு இல்லாத பெரும்பாலான மக்கள் காய்கறி வியாபாரம் மட்டுமே பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். திடீரென எங்களை காலி செய்ய கூறியதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

    வியாபாரத்துக்கு மாற்று இடம் ஒதுக்கி தர கேட்டும் அவர்கள் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இதனால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வந்தோம் என்று தெரிவித்தனர். அதன்பிறகு தங்களது கோரிக்கை மனுவை மாநகராட்சி அதிகாரிகளிடம் வழங்கி சென்றனர்.

    ×