search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vedikkai"

    • அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மாவிளக்கு போட்டு, பண்டங்கள், பலகாரங்கள் படையலிட்டு வேண்டுதல் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • குறிப்பாக இன்று மாலை குகை மாரியம்மன், காளியம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் உள்ள கோவில்களில் ஆடித் திருவிழாவையொட்டி மக்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மாவிளக்கு போட்டு, பண்டங்கள், பலகாரங்கள் படையலிட்டு வேண்டுதல் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அம்மனுக்கு பொங்கல் வைத்தல் மற்றும் குண்டம் இறங்கும் விழா, இன்று வண்டி வேடிக்கை என்பதால் திருவிழா களை கட்டியுள்ளது‌. குறிப்பாக இன்று மாலை குகை மாரியம்மன், காளியம்மன் கோவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என்பதால் லட்சக்கணக்கான மக்கள் இதில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் திருவிழாவிற்கு உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு வருவார்கள் என்பதால், அவர்களுக்கு கறி சோறு சமைத்து போட, சேலத்தில் இறைச்சி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆடு, கோழி, மீன்கள் கடைகளில் அதிகாலை நேரம் முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டம் கூட்டமாக மக்கள் இறைச்சியை அதிகளவில் வாங்கிச் சென்றனர்.

    சேலத்தில் டவுன், செவ்வாய் பேட்டை, குகை, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை, தாதகாப்பட்டி, லைன்மேடு, நெத்திமேடு, அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம், கருங்கல்பட்டி, களரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதலே ஆடு, கோழி, மீன்கள் இறைச்சி விற்பனை களை கட்டியது. வரும் ஞாயிற்றுக்கிழமை திருவிழா இறுதி நாள் வரை இறைச்சி விற்பனை விறுவிறுப்பாக நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    ×