என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VC Post"

    தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசையின் கணவர் டாக்டர் சவுந்தரராஜன் உள்ளிட்ட 41 பேர் விண்ணப்பித்துள்ளனர். #MGRMedicalUniversityVC
    சென்னை:

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. துணை வேந்தரை தேர்வு செய்ய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவத் துறை அறிவிப்பு வெளியிட்டது.

    கடந்த 30-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். மொத்தம் 41 பேர் இந்த பதவிக்கு விண்ணப்பித்து உள்ளனர். மருத்துவ பணியில் 20 ஆண்டுகள் அனுபவம், 10 வருடம் மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு தகுதிகள் அடிப்படையில் விண்ணப்பம் செய்து இருக்கிறார்கள்.

    விண்ணப்பித்தவர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகணன் நடராஜன், முன்னாள் பதிவாளர் டாக்டர் சுதா சே‌ஷய்யன், டாக்டர் பால சுப்பிரமணியன், டாக்டர் விமலா, பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் டி.எஸ். செல்வ விநாயகம் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

    வெளி மாநிலங்களை சேர்ந்த 3 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு, டாக்டர் பாரத்மன்சுக்லால் மோடி (குஜராத்), டாக்டர் காமேஷ்வரன் (ஆந்திரா), டாக்டர் வெங்கடகிருஷ்ண முரளி (கர்நாடகா).

    இந்த 41 பேர் பட்டியலில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசையின் கணவர் டாக்டர் சவுந்தரராஜன் பெயரும் உள்ளது.


    இவர் புகழ் பெற்ற சிறுநீரக மருத்துவ துறை நிபுணர் ஆவார். அரசு மற்றும் தனியார் துறையில் மருத்துவர் மற்றும் மருத்துவ பேராசிரியராக பணியாற்றி அனுபவம் பெற்றவர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை இவர்தான் செய்தார்.

    எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு இலவச மருந்துகள் வழங்கும் திட்டம் வருவதற்கு காரணமாக இருந்தார். ஏராளமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தவர்.

    நடிகர் ரஜினி, மறைந்த தலைவர்கள் ஜானகி ராமச்சந்திரன், மூப்பனார் ஆகியோருக்கு சிகிச்சை அளித்தவர்.

    விண்ணப்பித்துள்ளவர்களின் தகுதி, அனுபவம், நிர்வாக திறமை ஆகியவற்றின் அடிப்படையில் துணை வேந்தரை தேர்வுக்குழு தேர்வு செய்யும். #MGRMedicalUniversityVC
    ×