என் மலர்
நீங்கள் தேடியது "varushabhisakam"
- சேர்வைகாரன் மடம் விலக்கில் உள்ள தேரி சக்தி விநாயகர் கோவில் 29-வது வருஷாபிஷேக திருவிழா நடைபெற்றது.
- கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, திருவிளக்கு பூஜை நடந்தது.
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே சேர்வைகாரன் மடம் விலக்கில் உள்ள தேரி சக்தி விநாயகர் கோவில் 29-வது வருஷாபிஷேக திருவிழா நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, கோபுர கலச வேள்வி, பொது அர்ச்சனை மற்றும் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
இதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கு பொன்பாண்டியன் நாடார் தலைமை தாங்கினார். தொழிலதிபர் குணசேகரன் முன்னிலை வகித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.






