என் மலர்
நீங்கள் தேடியது "Vande Bharat Rail's"
- ஏப்ரல் 9-ந் தேதி கோவை - சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கம் துவங்கியது.
- 10 நாட்களில் கோவையில் இருந்து, 6,800 பேர் பயணம் செய்தனர்.
திருப்பூர் :
கடந்த ஏப்ரல் 9-ந்தேதி கோவை - சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் இயக்கம் துவங்கியது. ரெயில் சேவை துவங்கிய 10 நாட்களில் கோவையில் இருந்து, 6,800 பேர் பயணம் செய்தனர். அடுத்தடுத்த நாட்களுக்கும் முன்பதிவு சுறுசுறுப்பானது. மொத்தமுள்ள 535 இருக்கைகளும் நிறைந்தன.
இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து விட்டதால், வந்தே பாரத் ரெயிலில் முன்பதிவு சற்று குறைந்துள்ளது. மொத்தமுள்ள 533 இருக்கைகளில் கோவையில் இருந்து துவங்கும் பயணத்துக்கு 450க்கும் அதிகமான இருக்கைகள் நிரம்பியுள்ளன. 50 முதல் 75 இருக்கைகள் காலியாகக் கிடக்கின்றன. கோவையில் இருந்து சென்னைக்கு முன்பதிவு குறைந்தாலும் சேலம் - சென்னை இடையே டிக்கெட் முன்பதிவு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.






