என் மலர்

  நீங்கள் தேடியது "Vajravel Ananth"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வஜ்ரவேல் ஆனந்த் இயக்கத்தில் குணா பாபு - ஸ்வேதா நடிப்பில் உருவாகும் `லட்டு' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. #Laddu
  கிரிஸ்டல் கிரியேஷன்ஸ் சார்பாக அமுதா ஆனந்த் தயாரிப்பில், ஐரிஸ் புரொடெக்ஷன்ஸ் சார்பாக பி.ராதாகிருஷ்ணன் இணை தயாரிப்பில் உருவாகும் படம் `லட்டு'.

  இந்த படத்தை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களிடம் எடிட்டராக பணியாற்றிய வஜ்ரவேல் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகனாக குணா பாபு நடிக்கிறார். இவர் இரும்புத்திரை, தமிழ் படம் 2.0, தீரன் அதிகாரம் ஒன்று, காளி போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர கேடி (எ) கருப்பு துரை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்வேதா இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். குழந்தை நட்சத்திரங்களாக விஷ்வேஷ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். 

  குழந்தைகளுக்கு எதை சொன்னாலும் குணமாக சொல்ல வேண்டும் என்பதை இப்படம் கூறுகிறது. அம்மா இல்லாத இரட்டையரை தந்தை எப்படி வளர்க்கிறார் என்பதையும், அதை சார்ந்த இன்னும் பல சுவாரசியமான விஷயங்களையும் மையப்படுத்தி படம் உருவாகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ஓக்கேனக்கல், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் படம் வெளியாகவுள்ளது. #Laddu

  ×