search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vadiyur school"

    • தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தனது சொந்த பணத்தை அதிகமாக வழங்குகிறார்.
    • 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், ஆர்.ஓ. வாட்டர் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நிதி உதவி என தொடர்ந்து செய்து வருகிறார்.

    சுரண்டை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வாடியூர் புனித யோவான் பள்ளிக்கு கம்ப்யூட்டர் உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.எம். அன்பழகன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், அரசு ஒப்பந்ததாரர் கரையாளனுர் சண்முகவேல், வீராணம் ஒன்றிய கவுன்சிலர் சேக் முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ ர்களுக்கு கம்ப்யூ ட்டர் உபகரணங்களை வழங்கினர்.

    அப்போது பேசிய பழனி நாடார் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தனது சொந்த பணத்தை அதிகமாக வழங்குகிறார். ஆலங்குளத்தில் காமராஜர் சிலை அமைப்பதற்கு சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டார்.

    இதுவரை 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், ஆர்.ஓ. வாட்டர் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நிதி உதவி என தொடர்ந்து செய்து வருகிறார். பள்ளிக்கு கம்ப்யூட்டர் உபகரணங்கள் வழங்க உறுதுணையாக இருந்த அரசு ஒப்பந்ததாரர் கரையாளனுர் சண்முகவேலுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தொடர்ந்து அவர் கல்விப் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த பள்ளிக்கு சிறுபான்மை நல ஆணையர் பீட்டர் அல்போன்ஸ் நிதியிலிருந்து சுற்று சுவர் கட்ட ஏற்பாடு செய்து தரப்படும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி 40 இடத்திலும் வெற்றி பெறும் என பேசினார்.

    விழாவில் வாடியூர் கிளைக் கழக செயலாளர் அந்தோணி சேவியர், குட்டி, நிக்சன், மைக்கேல் ராஜ, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி, கழகப் பேச்சாளர் மரியராஜ், மரியதாயபுரம் ஜோசப், பரங்குன்றாபுரம் செல்வராஜ், பாலசுப்பிரமணியன், அமானுல்லா, கணேசன், ராஜாமணி, காங்கிரஸ் நிர்வாகிகள் தெய்வேந்திரன், பிரபாகர்,அரவிந்த் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×