என் மலர்
நீங்கள் தேடியது "Vaazhndhu Kaattuvom Project"
- பச்சைப்பயிறு சாகுபடி குறித்த சமுதாய பண்ணை பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
- மகளிர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பொன்னேரி:
தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தடபெரும்பாக்கம் ஊராட்சியில் பச்சைப்பயிறு சாகுபடி குறித்த சமுதாய பண்ணை பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
இந்த சமுதாய பண்ணை பள்ளி மூலம் பச்சைப் பயிறு விதை விதைக்கும் நிகழ்ச்சி தடபெரும்பாக்கம் ஊராட்சி சிங்கிலிமேடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட மீஞ்சூர் வட்டார அணித்தலைவர் கா.கணபதி, திட்ட செயலர் அருள், ஊராட்சி மன்ற துணை தலைவர் சபிதா பாபு , ஊராட்சி அளவில்லா கூட்டமைப்பு செயலாளர் சுகுணா, பயிற்சியாளர் அனுசுயா மற்றும் தடபெரும்பாக்கம் மருதம் உழவர் உற்பத்தியாளர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.