search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaazhathottaththu Ayyan Temple"

    • அய்யன் குருபூஜை திருவிழா மற்றும் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் வி.அய்யம்பாளையம் பகுதியில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அய்யன் குருபூஜை திருவிழா மற்றும் திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன்கோவிலில் திருவாதிரை திருவிழா நேற்று முன்தினம் (வியாழக்கிழமை)துவங்கியது.அதன்படி கடந்த 5-ந்தேதி காலை 6 மணிக்கு சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பக்தர்கள் பொங்கல் வைத்து அய்யனை வழிபட்டனர். பின்னர் இரவு 7 மணிக்கு திருக்காவடி பூஜை நடைபெற்றது.நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு வாழைத்தோட்டத்து அய்யனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.பின்னர் காலை 9 மணிக்கு விநாயகர்,சுப்பிரமணிய சமேத வள்ளி தெய்வானை, வாழைத்தோட்டத்து அய்யன்,நடராஜர் சமேத சிவகாசிஅம்மன் ஆகிய சுவாமிகளின் திருவீதி உலா நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் மதியம் 1மணிக்கு மஹா அன்னதானம் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு வாழைத்தோட்டத்து அய்யன் மங்கள இசையுடன் புஷ்பபல்லக்கில் திருவீதி உலா நடைபெறவுள்ளது.

    ×