search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "usurpation of property"

    • சபாபதி. இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு 6 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என மொத்தம் 11 குழந்தைகள் உள்ளனர்.
    • தாய் பத்மாவதி தனது சொத்துக்களை சரிசமமாக அனைத்து குழந்தைகளுக்கும் எழுதி வைத்தாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே வரிச்சிக்குடி புது த்தெருவில் வசித்து வந்தவர் சபாபதி. இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு 6 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் என மொத்தம் 11 குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய சகோதரர் சங்கர் (வயது56) என்பவர், வரிச்சிக்குடியில் தனியாக வசித்து வந்தார். மூத்த சகோதரர் இளங்கோவன் (66) வெளிநாட்டிலும் மற்றவர்கள் வெளி நாட்டிலும், இந்தியாவிலும் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு சபாபதி இறந்துபோனார். இதனால், பத்மாவதி இளைய சகோதரர் சங்கர் பாதுகாப்பில் சபாபதி வீட்டிலேயே வசித்து வந்தார். தாய் பத்மாவதி செலவுக்காக, சகோதரர், சகோதரிகள் மாதம் மாதம் ஒரு தொகையை, சங்கர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வந்துள்ளனர்.

    மேலும், பத்மாவதி வசம் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கம், வைரம் நகைகள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நி லையில், கடந்த 2017ல் பத்மாவதி கீழே விழுந்து காயம் அடைந்ததால், சங்கர் தாயை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பராமரித்து வந்துள்ளார். பின்னர், தாய் பத்மாவதி தனது சொத்துக்களை சரிசமமாக அனைத்து குழந்தைகளுக்கும் எழுதி வைத்தாக கூறப்படுகிறது. தாய் உடல் நிலை பாத்திக்க ப்பட்டு இருந்ததை தனக்கு சாதமாக பயன்படுத்தி கொண்டு, சங்கர், தாய், தந்தையின் பூர்வீக சொத்துக்கள், சகோதரர், சகோதரிகளுக்கான உரிமங்கள் சிலவற்றையும், பத்மாவதி வங்கியில் டெபாசிட் செய்திருந்த சுமார் 7.50 லட்சம் பணம் மற்றும் சகோதர்கள் அனுப்பிவந்த பணம் அனைத்தையும் சங்கர் தனது பெயருக்கு மாற்றிகொண்டார்.

    இந்நிலையில், பத்மா வதி கடந்த 2021ல் இறந்துபோனார். தொடர்ந்து காரைக்கால் வரிச்சிச்குடி திரும்பிய இளங்கோவனுக்கு, தாயின் பணம், நகை, சொத்துக்களை சங்கர் ஏமாற்றி பறித்துகொண்டதாக மற்ற சகோதரர்கள் மூலம் அறிந்து கொண்ட இளங்கோவன், இது குறித்து, கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில், சகோதரர் சங்கர் தங்களது தாய், தந்தையர்களின் சொத்துக்கள், பணம் மற்றும் சகோதர, சகோதரி களுக்கான சொத்துக்களை தாயிடமிருந்து ஏமாற்றி பறித்துக் கொண்டதாகவும், மேலும் சில அரசு முத்திரை தாள்கள், பத்திரங்கள், வெறும் பேப்பர்களில் பத்மாவதியின் கையெ ழுத்தை மிரட்டி வாங்கி வைத்திருப்பதாகவும் அதனை சங்கரிடமிருந்து மீட்டு தர வேண்டுமென புகார் கொடுத்தார். போலிசார் இது சிவில் வழக்கு, கோர்ட் மூலம் தீர்த்துகொள்ளும்படி அனுப்பி வைத்துவிட்டனர். தொடர்ந்து, உயர் அதிகாரிகாளை இளங்கோ வன் சந்தித்து புகார் கொடுத்தும் யாரும் வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால், இளங்கோவன் காரைக்கால் கோர்ட்டில் இது குறித்து முறையிட்டார். தொடர்ந்து நீதிபதி உத்தரவின் பேரில், போலீ சார் சங்கர் மீது இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    ×