search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Urea shortage at individual wholesale outlets"

    • யூரியா தட்டுப்பாடு புகார்
    • பயிர் காப்பீடு இழப்பீடு தொகை நிலுவை

    ராணிப்பேட்டை :

    மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மேலும் கடந்த மாதம் பெறப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்கப்பட்டது.

    கூட்டத்தில் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ளதை வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது . மேலும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனி யார் விற்பனை நிலையங்களில் யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது.

    மேலும் கூடுதல் விலைக்கு விற்கின்றனர் என புகார் தெரிவித்தனர்.

    சோளிங்கர் , கலவை மற்றும் அரக்கோணம் பகுதிகளில் உழவர் சந்தை அமைக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் . ஆக்கிர மிப்பு செய்யப்பட்ட இடங்க ளுக்கு பட்டா வழங்கியவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயி கள் கோரிக்கை விடுத்தனர் அதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது.

    கடந்த மாதம் ரூ.15 கோடி பயிர் காப்பீடு தொகை விவ சாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது . யாருக்கெல்லாம் காப்பீடு தொகைகிடைக்கவில்லையோ அவர்கள் தனித்தனியாக மனு வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் . விவசாயிகள் யூரியாவை அதிக அளவில் பயன்படுத்தி சாகுபடி செய் வதை குறைக்க வேண்டும் . யூரியா போதிய அளவில் அனைத்து இடங்களிலும் உள்ளது. கூடுதலாக விவசாயிகள் கேட்கின்றனர் என தெரிவித் துள்ளனர்.

    இதன் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப் படும் . அதே போன்று மண் வளத்தை பாதிக்கக்கூடியயூரி யாவை பயன்படுத்துவதை தவிர்த்து, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நானோ யூரியாவை பயன்படுத்தமுன் வர வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றி வருகிறோம் . தொடர்ந்து பணிகள் நடை பெற்று வருகிறது இவ்வாறு கலெக்டர் தெரி வித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் குமரேஷ்வரன், வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம், கூட் இறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் திருகுண ஐயப்ப துரை, வேளாண்மைதுணை இயக்குனர்கள் விஸ்வநாதன். ஸ்ரீனிராஜ் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×