search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Urad dal halwa"

    வாரம் இருமுறை உளுந்து களி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று எளிய முறையில் உளுந்து களி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 1 கப்
    உளுந்து - அரை கப்
    சுக்கு தூள் - 1 டீஸ்பூன்
    தேங்காய் துருவல் - கால் கப்
    கருப்பட்டி - அரை கப்



    செய்முறை :

    அரிசி, உளுந்து இரண்டையும் தண்ணீரில் ஊற வைத்து அதனுடன் சுக்கு தூளை சேர்த்து அரைத்துகொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கருப்பட்டியை கொட்டி நன்றாக கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி கொள்ளவும்.

    அதனுடன் அரைத்த மாவு கலவையை கொட்டி கிளறி விடவும்.

    களி பதத்துக்கு வெந்ததும் தேங்காய் துருவலை தூவி இறக்கி ஆறவைத்து சுவைக்கலாம்.

    சூப்பரான உளுந்து களி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×