search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UP Rain Kills 70"

    பருவமழை தீவிரம் அடைந்துள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்கள் கனமழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #UPRain
    லக்னோ:

    பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளக் காடானது.

    இதில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது. 50-க்கு  மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக்ராவில் 5 பேரும், மெயின்புரியில் 4 பேரும், முசாபர் நகர், கஸ்கஞ்ச் பகுதிகளில் 3 பேரும், கான்பூர், மதுரா, காசியாபாத், ரே பரேலி உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.

    கான்பூர் மாவட்டம் கங்கை நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கங்கை நதிக்கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.



    மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் முடுக்கி விட்டுள்ளார். கனமழையில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்துக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளர். அத்துடன், பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

    வீடு இழந்தவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுக்கும்படியும் உத்தரவிட்டிருக்கிறார். இந்த கனமழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #UPRain

    ×