என் மலர்

  நீங்கள் தேடியது "Unobstructed Certificate"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோழிகளுக்கு அதிகமாக பண்ணைகளில் வளர்க்கும், கோழிப்பண்ணை யாளர்கள் அனைவரும் கட்டாயம் மாசு கட்டுப்பாட்டுத்துறையின் கீழ் பதிவு செய்து, தடையில்லாச் சான்று பெற வேண்டும்.
  • கோழிப்பண்ணைகளின் தரை தளத்தில் களி மண் அமைத்திருந்தால் அதை அகற்றிவிட்டு, கான்கிரீட் தரைத்தளம் அமைக்க வேண்டும்.

  நாமக்கல்:

  மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் ஒரு சட்ட திருத்தத்தை அறிவித்தது.

  கான்கிரீட் தரைதளம்

  அதில், 5 ஆயிரம் கோழிகளுக்கு அதிகமாக பண்ணைகளில் வளர்க்கும், கோழிப்பண்ணை யாளர்கள் அனைவரும் கட்டாயம் மாசு கட்டுப்பாட்டுத்துறையின் கீழ் பதிவு செய்து, தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும், கோழிப்பண்ணைகளின் தரை தளத்தில் களி மண் அமைத்திருந்தால் அதை அகற்றிவிட்டு, கான்கிரீட் தரைத்தளம் அமைக்க வேண்டும். அப்போதுதான் கோழிகளின் எச்சம் தரையில் விழுந்து பூமிக்குள் செல்லாமல் தடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.

  இந்த நிலையில், நாமக்கல் மண்டலத்தில் உள்ள நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 1000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் சுமார் 6 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

  உயிர் உரம்

  நாமக்கல் மண்டலத்தில் உள்ள பண்ணைகளின் அடித்தளத்தில் செம்மன் மற்றும் கிராவல் மண் கொண்டு தரைத்தளம் அமைப்பது வழக்கம். அதனால் பெரும்பாலான பண்ணைகள் இந்த அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளது.

  மேலும், ஒவ்வொரு முறையும் புதிய கோழிக்குஞ்சு கள் விடும்போது பண்ணை களை முழுமையாக சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பதாலும், உயிரி பாதுகாப்பு முறைகள் கடைபிடிக்கப்படுவதாலும், இப்பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழி களில் கிடைக்கும் எச்சம் மாசுபடுவதில்லை. இதை விவசாயிகள் வாங்கிச்சென்று தங்கள் தோட்ட பயிர்களுக்கு உயிர் உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

  சுகாதாரமான முறையில் கோழிகள் வளர்ப்பு

  இந்த நிலையில், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய அறி விப்பால், நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகள் தடையில்லா சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதையொட்டி பண்ணையாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த, நாமக்கல் எம்.பி டெல்லியில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் இது குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும் நாமக்கல் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரமான முறையில் பண்ணைகள் அமைத்து கோழிகள் வளர்ப்பு செய்வது குறித்து விளக்கி கூறினார்.

  இதை ஏற்றுக்கொண்ட மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி யுள்ளனர். அதில் கோழிப்பண்ணைகளில் கான்கிரீட் தரை தளத்திற்கு பதிலாக செம்மண் மற்றும் கிராவல் மண் தரை அமைத்துள்ள பண்ணை களையும் ஆய்வு செய்து, அந்த பண்ணைகளுக்கு தடையில்லா சான்று வழங்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

  விரைவில் ஆய்வு

  இதையொட்டி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் இந்த நடைமுறையை பின்பற்றி சான்று வழங்கலாம் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் விரைவில் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் குழு தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்காக ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக நாமக்கல் மண்டல கோழி பண்ணை யாளர்கள் கூறியுள்ளனர்.

  ×