என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UnionCabinet"

    மணிப்பூரில் இந்தியாவின் முதல் விளையாட்டிற்கான பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான அவசர சட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. #sportsuniversity #UnionCabinet
    புதுடெல்லி:

    இந்தியாவில் பல்வேறு துறைகளுக்கு தனித்தனி பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஆனால் விளையாட்டு துறைக்கென்று ஒரு தனி பல்கலைக்கழகம் கிடையாது. தடகள போட்டிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வகுப்பு நடத்த பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆனால், விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொழில்நுட்பம், மிக நுட்பமான பயிற்சி போன்றவைகளுக்கு பல்கலைக்கழகம் தேவைப்படுகிறது.

    அதனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மணிப்பூரில் விளையாட்டிற்கான பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான அவசர சட்டம் மசோதாவாக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 2024-15 ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த பல்கலைக்கழகத்திற்காக மோடி 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருந்தார்.

    இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் விளையாட்டிற்கான பல்கலைக்கழகம் அமைக்க தாக்கல் செய்யப்பட்ட அவசர சட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியதாக தெரிவித்தார். மேலும், பல்கலைக்கழம் அமைக்க மணிப்பூர் அரசு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினால் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான பணி விரைவில் தொடங்கப்படும் என கூறினார். #sportsuniversity  #UnionCabinet

    ×