என் மலர்

  நீங்கள் தேடியது "Unexpectedly failed"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தலை, முகம், வாயில் ரத்த காயம் ஏற்பட்டது
  • போலீசார் விசாரணை

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலையில் உள்ள தியாகி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி . இவரின் மனைவி சாந்தி (வயது 55). இவர் உடல்நலப் பாதிப்பால் சிகிச்சைக்காக 20 ந்தேதி இரவு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  21 - ந்தேதி மாலை கட்டிலில் படுத்திருந்த அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே தரையில் விழுந்தார். அதில் அவருக்கு தலை, முகம், வாயில் ரத்த காயம் ஏற்பட்டது.

  பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

  அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×