என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "unauthorized plots"

    • மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன் முறைபடுத்த இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்து கேட்டுக்கொள்ளப்படுகிறது.
    • கட்டிட பணி முடிந்த வுடன் அக்கட்டிடத்திற்கு இணையதளத்தின் வழியாகவே வரிவிதிப்பு செய்ய விண்ணப்பி க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி - அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன் முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவு களை வரன் முறைபடுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு, உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.2.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை எண்.118 வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, நாள்.4.9.2023-ன்படி ஆணையிடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்து மனையினை வரன்முறை படுத்தி க்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறது. மேலும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி கட்டிட விதிகள் 2019 பாகம் 11 விதி 6- ன்படி நகர் பகுதியில் கட்டிட விண்ண ப்பங்களை இணையதளம் வாயிலாக உரிய கட்டிட அனுமதி பெற்ற பின்பே கட்டிடங்கள் வரைபடத்தின்படி கட்ட வேண்டும்.

    அனுமதியின்றி மற்றும் அனுமதிக்கு மாறாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு திருத்தப்பட்ட தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம் 1998 பிரிவு 133 (5), 135(1) (2), 135 (6) ன் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் பிரிவு 180 -ன் கீழ் குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்படும்.

    கட்டுமானம் தொடர்ந்து கட்டுவதற்கான அனுமதி ச்சான்று மற்றும் கட்டிட முடிவு சான்று தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019 -ன்விதி எண்.20-ன் படி 3 குடியிருப்புகளுக்கு உட்பட்டஅல்லது 750 சதுர மீட்டர் பரப்பளவு வரையி லான மற்றும் 12 மீட்டர் உயரத்திற்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டட ங்கள் தவிர்த்து ஏனைய அனைத்து வகையிலான கட்டிடங்களுக்கு கட்டிட முடிவு சான்று பெறுவதற்கு கட்டிடத்தின் உரிமையாளர், கட்டுமான நிறுவனத்தினர் பொது அதிகார முகவர் ஆகியோர் விண்ணப்பம் இணைய வழி சமர்ப்பித்து, மின் இணைப்பு பெற கட்டிட முடிவு சான்று பெற்றுக்கொள்ளலாம்.

    கட்டிட பணி முடிந்த வுடன் அக்கட்டிடத்திற்கு இணையதளத்தின் வழியாகவே வரிவிதிப்பு செய்ய விண்ணப்பி க்கலாம்என்று தேனி அல்லி நகரம் நகராட்சி ஆணை யாளர் கணேசன் தெரி வித்துள்ளார்.

    ×