என் மலர்
நீங்கள் தேடியது "Udumalai Netaji Maidan"
- சாரப்பாம்பை கண்டு பொதுமக்கள் பதறி அடித்து ஓடினர்.
- பொதுமக்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
உடுமலை :
உடுமலை நேதாஜி மைதானம் நுழைவாயில் எதிரில் உள்ள காலியிடம் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காளியம்மன் கோவில் பகுதியில் திடீரென நடமாடிய ஒற்றை சாரப்பாம்பை கண்டு பொதுமக்கள் பதறி அடித்து ஓடினர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும் இந்த பகுதியில் கோவில் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் .எனவே புதர்பகுதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






