என் மலர்
முகப்பு » UchiniMahaliamman
நீங்கள் தேடியது "UchiniMahaliamman"
- ஈசான உச்சினி மாகாளியம்மன் கோவில் 3-வது வருசாபிஷேக விழா நடைபெற்றது.
- வருசாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தென்திருப்பேரை:
ஆழ்வார் திருநகரி குண்டு தெருவில் உள்ள ஈசான உச்சினி மாகாளியம்மன் கோவில் 3-வது வருசாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கணேசன் குருக்கள் தலைமையில் வேத ஆகம முறைப்படி கணபதி பூஜை, பஞ்சகவ்ய பூஜை, சுதர்சன பூஜை, மகாலட்சுமி பூஜை, கும்ப பூஜை, நவக்கிரக பூஜை, யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு மற்றும் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அம்மனுக்கு அபிஷேக பூஜை சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.
×
X