search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TV Set Project"

    • தஞ்சாவூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கருக்கு உரங்களும், 37 ஆயிரத்து 350 ஏக்கருக்கு விதைகளும் வழங்கப்பட உள்ளன.
    • தஞ்சை மாவட்டத்தில் குறுவை தொகுப்பு திட்ட பணிகள் தொடங்கவில்லை.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக இந்த ஆண்டு ரூ.75.95 கோடியில் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    இந்த திட்டத்தில் ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டி.ஏ.பி., 25 கிலோ பொட்டாஷ் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    மேலும் பசுந்தாள் உரங்கள், 50 சதவீத மானியத்தில் விதை நெல், மாற்றுப்பயிர் திட்டத்தில் உளுந்து, கடலை, சிறுதானிய பயிர்களுக்கான விதைகள், பவர் டில்லர் உள்ளிட வேளாண் கருவிகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கருக்கு உரங்களும், 37 ஆயிரத்து 350 ஏக்கருக்கு விதைகளும் வழங்கப்பட உள்ளன.

    அதிகபட்டசமாக 2.50 ஏக்கர் வரை மட்டுமே தொகுப்பு திட்டம் கிடைக்கும்.

    ஆனால் இதுவரை தஞ்சை மாவட்டத்தில் குறுவை தொகுப்பு திட்ட பணிகள் தொடங்கவில்லை.

    இதேப்போல் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பணிகள் தொடங்கப்படவில்லை.

    இது குறித்து விவசாயிகள் கூறுமபோது:-

    குறுவை தொகுப்பு திட்டத்தில் பயன்பெற கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா, அடங்கல் வாங்க வேண்டும்.

    அதனை உதவி வேளாண் அலுவலரிடம் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    பின்னர் தான் கூட்டுறவு சங்கத்தில் உரம் கிடைக்கும். இந்த நடைமுறை முடிந்து உரங்கள் கிடைக்க குறைந்தது இரண்டு வாரங்களாகிவிடும்.

    எனவே உடனடியாக குறுவை தொகுப்பு திட்ட பணிகளை தொடங்க வேண்டும் என்றனர்.

    இது பற்றி வேளாண் அதிகாரிகள் கூறும்போது:-

    தஞ்சை மாவட்டத்தில் குறுவை தொகுப்பு திட்டத்துக்கு உழவன் செயலி மூலம் இதுவரை 2800 பேர் பதிவு செய்துள்ளனர்.

    நாளை மறுநாளில் (திங்கள்கிழமை) இருந்து குறுவை தொகுப்பு திட்டம் வழங்கும் பணி தொடங்கப்படும் என்றனர்.

    ×