என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TUNGAPURAM AYYANAR TEMPLE THEROTTAM"

    • துங்கபுரம் அய்யனார் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    • 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, துங்கபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருத்தேர் விழா கடந்த 3-ந்தேதி சுவாமிகளுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது.

    இதையொட்டி காலை 10.30 மணியளவில் அய்யனார் உள்ளிட்ட சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் முழங்க தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகளின் வழியாக தேர் சென்று மீண்டும் நிலையம் வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் சுவாமியை பயபக்தியுடன் வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் குன்னம் தாலுகா, டி.கீரனூர் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டமும் நேற்று இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். துங்கபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 18-ந்தேதி இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×