search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Truck on tractor Collision"

    • கூலித் தொழிலாளர்கள் 6 பேர் டிராக்டரில் முன்பக்கம் அமர்ந்து சென்றுள்ளனர்.
    • டிராக்டரில் அமர்ந்து சென்ற மேலகொந்தை கிராமத்தைச் சேர்ந்த ரஜினி(47) உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு வேர் கட்டை ஏற்றி க்கொண்டு டிராக்டர் சென்று கொண்டிருந்தது. டிராக்டரை விழுப்புரம் அருகே உள்ள மேல கொந்தை கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(வயது 35), என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 6 பேர் டிராக்டரில் முன்பக்கம் அமர்ந்து சென்றுள்ளனர். 

    இந்த டிராக்டர் கேணிப்பட்டு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, சென்னையில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்த புரத்திற்க்கு டேபிள், சேர் ஏற்றி சென்ற லாரி டிரைவரின்கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற டிராக்டர் மீது அதி வேகமாக மோதியது. இதில் டிராக்டரில் இருந்த வேர் கட்டை முன் பக்கம் சரிந்து, டிராக்டரில் அமர்ந்து சென்றவர்கள் மீது பலமாக தாக்கியது. இதனால் டிராக்டரில் அமர்ந்து சென்ற மேலகொந்தை கிராமத்தைச் சேர்ந்த ரஜினி(47) உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சக்திவேல், சதீஷ், வெங்கடேஷ், ராஜ்குமார், திருநாவுக்கரசு, சரத்குமார் உள்ளிட்ட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து மயிலம் போலீசார் விரைந்துசென்று உயிரிழந்த ரஜினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். 

    ×