என் மலர்
நீங்கள் தேடியது "tripartite meeting"
- மரவள்ளி கிழங்கு விலை கிடைக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் விரைவில் முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்.
- முதல்-அமைச்சர் ஸ்டாலின் தி.மு.க தலை வராக 2-ம் முறை பதவியேற்றத்திற்கு வாழ்த்துக்கள்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் பாரத் சம உடமை கட்சி ஆலோசனைக் கூட்டம், பொதுச்செயலாளர் பழனி ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் வருமாறு:
முதல்-அமைச்சர் ஸ்டாலின் தி.மு.க தலை வராக 2-ம் முறை பதவி யேற்றத்திற்கு வாழ்த்துக்கள். தலைவாசல் ஆரம்ப சோதனை நிலையத்தை அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டும் தலைவாசலில் தீயணைப்பு நிலையம் புதிதாக அமைக்க வேண்டும் மரவள்ளி கிழங்கு விலை கிடைக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் விரை வில் முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்
தீபாவளி பண்டிகைக்கு ரேஷன் கடையில் இலவச சக்கரை மற்றும் பாமாயில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் வழங்கிட வேண்டும் திமுகவில் உள்ள அமைச்சர்கள், அரசு பஸ் பயணம் செய்தவர்களை ஓசி பயணம் என்றும் திட்ட அவதூறான பேச்சுகளை பேசி வருகின்றனர் இதுபோன்று அவதூறாக பேசும் அமைச்சர்கள் எம்.பி.க்கள் மீது முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஹிந்து மதம் மற்றும் வரலாறு குறித்து அரசியல் செய்து அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.






