என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tribal people who participated in the protest in traditional dress"

    • அரசு நிர்ணயத்துள்ள இடம் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான இடமாகும்.
    • கோவிலின் புனிதத் தன்மை அழிந்து விடும் என்பதால் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்

    அரவேணு, கோத்தகிரி பழங்குடியின கோத்தர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து அய்யனோர் அம்மனோர் கோவில் முன்பு 60-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் கூறும்போது, உழவர் சந்தை அமைப்பதற்கு அரசு நிர்ணயத்துள்ள இடம் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான இடமாகும். இங்கு எங்களுடைய பூர்வீக கோவில் அமைந்துள்ளதால் உழவர் சந்தை அமைக்க கூடாது. இது குறித்து அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அனைத்து நிர்வாகிகளிடம் பல முறை மனு அளித்துள்ளோம். எனவே இந்த பகுதியில் உழவர் சந்தை அமைப்பதற்கு நாங்கள் ஒரு காலமும் அனுமதிக்க மாட்டோம். எங்கள் நிலம் எங்களுக்கே வழங்கப்பட வேண்டும். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் நாங்கள் போராட்டங்கள் நடத்துவோம். கோவிலின் புனிதத் தன்மை அழிந்து விடும் என்பதால் இந்த இடத்தில் உழவர் சந்தை கட்ட நாங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். அரசு உழவர் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றனர். 

    ×