என் மலர்
நீங்கள் தேடியது "Transgender awareness"
- கல்விக்கேற்ப வேலைவாய்ப்புகள் பெற காவல்துறை சார்பில் உதவி செய்வதாகவும் கூறினர்
- ரெயில்களில் பயணிகளை துன்புறுத்துவது போன்ற பல்வேறு புகார்கள் வந்துள்ளது
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இன்று திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
திருநங்கைகள் சங்க தலைவர் மாயா உள்பட 20 திருநங்கைகள் பங்கேற்றனர். திருநங்கைகள் ரெயில்களில் பிச்சை எடுப்பது, பயணிகளிடம் பணம் பறிப்பது, பயணிகளை துன்புறுத்துவது போன்ற செயல்கள் குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளது.
திருநங்கைகள் ஈடுபட கூடாது என அறிவுரைகளை வழங்கினர். மேலும் திருநங்கைகளுக்கு எதிரான தீமையைத் தவிர்க்க அவர்களின் கல்விக்கேற்ப வேலைவாய்ப்புகள் பெற காவல்துறை சார்பில் உதவி செய்வதாகவும் கூறினர்.






