என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Training of bulls"

    • காளைகளுக்கு தற்காலிகமாக வாடிவாசல் அமைத்தும், மண்களம் அமைத்தும் பிரத்யேகமாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
    • மேலும் காளைகளுக்கு மண்குவியலில் முட்டும் கொம்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. காலை, மாலை வேளைகளில் தவிடு, பருத்தி விதை, சோளம், அரிசிமாவு, பேரிச்சம்பழம் போன்ற சத்தான உணவுகள் வழங்கப்பட்டு மாடுகளை தயார் படுத்தி வருகின்றனர்.

    வத்தலக்குண்டு:

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைத்திருநாளான பொங்கல பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் பண்டிகையின் போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் திண்டுக்கல், மதுரை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், எம்.வாடிப்பட்டி முத்துலாபுரம், சித்தரேவு, சித்தையன்கோட்டை பகுதிகளில் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இந்த காளைகளுக்கு தற்காலிகமாக வாடிவாசல் அமைத்தும், மண்களம் அமைத்தும் பிரத்யேகமாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தீவிர பயிற்சி அளிக்கும் பணிகள் எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம் பகுதிகளில் நடைபெற்று வருகின்றது.

    காளைகளுக்கு வாரத்தில் 1 நாள் நீச்சல் பயிற்சியும், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுமார் 4 கி.மீ தூரம் நடைப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் காளைகளுக்கு மண்குவியலில் முட்டும் கொம்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. காலை, மாலை வேளைகளில் தவிடு, பருத்தி விதை, சோளம், அரிசிமாவு, பேரிச்சம்பழம் போன்ற சத்தான உணவுகள் வழங்கப்பட்டு மாடுகளை தயார் படுத்தி வருகின்றனர்.

    வட மஞ்சுவிரட்டு பயிற்சி என்னும் வித்தியாசமான பயிற்சியும் வழங்கப்படுகின்றன. இப்பயிற்சியில் ஜல்லிக்கட்டு மாடு ஓடாத வண்ணம் களத்தின் நடுவில் வடக்கயிறால் கட்டி வைத்து மாடு களத்தில் சுற்றி வந்து மாடுபிடி வீரர்களை ஒருகை பார்ப்பதற்காக இப்பயிற்சினை அளிக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க மாநில இணைச்செயலாளர் அருண்குமார் கூறியதாவது, ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு பயிற்சியளிப்பதற்கு தற்காலிமாக வாடிவாசல் அமைத்து காளைகளை விட்டு பழக்கப்படுத்தினால் போட்டி நேரத்தில் வாடிவாசலை பயமின்றி தாண்டும்.

    மாடுகளை கயிற்றால் கட்டி மாடுபிடி வீரர்கள் பயிற்சியளிக்கின்றனர். இங்கு கரிமாடு, நெத்திமரை கரைசல் செலலைகாளை, செவலைமரை மன்னப்போர், மரமாடு காம்பைமாடு உட்பட 15க்கும் மேற்பட்ட வகையான மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றது. இப்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் மூல்லிக்கட்டு மாடுகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெள்ளி காசுகள், கட்டில், சிலவர் மற்றும் வெண்கல பாத்திரங்கள், சைக்கிள் உள்ளிட்ட பல பொருட்களை பெற்றுள்ளது.

    இந்தவகையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் பயிற்சி அளித்து வருகிறோம் என்றார். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறினார்.

    ×