search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train collision death"

    ஊரப்பாக்கத்தில் ரெயில் மோதி இளம்பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வண்டலூர்:

    ஊரப்பாக்கம், வெங்கடேஷ்வரா அவன்யூவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தவர் ஏமிகார் மைக்கேல் (வயது26).

    இவர் சேலத்தில் கடந்த 26 ஆண்டுக்கு முன்பு தொட்டில் குழந்தை திட்டத்தில் விடப்பட்டவர். ஆதரவற்றவரான இவர் டிப்ளமோ படிப்பு முடித்து ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வேலை முடிந்து அறைக்குவந்த ஏமிகார் மைக்கேல் பின்னர் நடைபயிற்சி செல்வதற்காக அப்பகுதியில் உள்ள தண்டவாளம் அருகே நடந்து சென்றார்.

    அப்போது ஏமிகார் மைக்கேல் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு தன்னுடைய செல்போனில் பாட்டு கேட்டபடி சென்றதாக தெரிகிறது.

    அந்த நேரத்தில் தண்டவாளத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஏமிகார் மைக்கேல் மீது உரசியது.

    இந்த வேகத்தில் அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் பலத்த காயம் அடைந்த ஏமிகார் மைக்கேல் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தாம்பரம்  ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தர்மபுரியில் ரெயில் மோதி என்ஜினீயர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தின் பின் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் இறந்துகிடந்தார். இதுபற்றி தகவலறிந்த தர்மபுரி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினார்கள். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இறந்து கிடந்த வாலிபர் ஒட்டப்பட்டி பழைய குடியிருப்பு பகுதியை சேர்ந்த என்ஜினீயர் பைரவன் (வயது 24) என்பதும், சென்னையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது. அவர் ரெயிலில் அடிபட்டு இறந்து இருப்பது உறுதியானது. அவர் ரெயில் தண்டவாளத்தை கடந்தபோது விபத்தில் சிக்கினாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பைரவன் எழுதிய ஒரு கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×