என் மலர்
நீங்கள் தேடியது "Traffic Route Change"
- வீரபாண்டி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
- வீரபாண்டி வழியாக செல்லும் வாகனங்கள் கம்பம், குமுளிக்கு உப்புக்கோட்டை, கூழையனூர், குச்சனூர், சின்னமனூர் வழியாக செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தேனி:
தேனி அருகே வீரபாண்டியில் உள்ள பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. 16-ந்தேதி வரை நடைபெறும் திருவிழாவிற்கு தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
வேண்டுதல் நிறைவேறியவுடன் அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இதனால் வீரபாண்டி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. எனவே போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீரபாண்டி வழியாக செல்லும் வாகனங்கள் கம்பம், குமுளிக்கு உப்புக்கோட்டை, கூழையனூர், குச்சனூர், சின்னமனூர் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கம்பத்தில் இருந்து தேனி வரும் வாகனங்கள் உப்பார்பட்டிவிளக்கு, தப்புக்குண்டு, தாடிச்சேரி, அரண்மனைப்புதூர் வழியாக தேனி வர அறிவுறுத்தப்பட்டுள்ளது என தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார்.






