என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic in Thandikudi hills"

    • தாண்டிக்குடி மலைப்பகுதி யில் பலா, சில்வர் ஓக், முருங்கை மற்றும் பல ஜாதி மரங்கள் வெட்டப்படு கின்றன.
    • இந்த மரங்களை மெயின் ரோட்டில் போட்டு லாரிகளில் ஏற்றப்படுவதால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதி யில் பலா, சில்வர் ஓக், முருங்கை மற்றும் பல ஜாதி மரங்கள் வெட்டப்படு கின்றன. இவற்றுக்கு முறையான அனுமதி பெறப்பட்டதா என்று சந்தேகத்துக்குரியதாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான லாரிகளில் மரங்கள் கடத்தப்படு கின்றன. இந்த மரங்களை மெயின் ரோட்டில் போட்டு லாரிகளில் ஏற்றப்படுவதால் போக்கு வரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    பஸ்கள் குறித்த நேரத்தில் சென்றடைவதில்லை. அதனால் பயணிகள் ஊர்களுக்கு தாமதமாக செல்கின்றனர். வாகனங்கள் சென்று வருவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. வனத்துறை அனுமதி பெறும் தோட்டங்களில் வைத்து லாரிகளில் மரங்களை ஏற்றப்பட வேண்டும்.

    ஆனால் ரோட்டோர ங்களில் மரங்களை குவிப்பதால் போக்கு வரத்திற்கு இடையூறு ஏற்படுகின்றன. தாண்டி க்குடி, மங்களம்கொம்பு, தடியன்குடிசை, கே.சி.பட்டி, குப்பம்மாள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் ஏராளமான மரங்கள் காணப்படுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×