search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traditional Food Festival"

    • வட்டார அளவிலான மகளிர் சுய உதவித்குழு பங்கேற்ற சிறுதானியஙகள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
    • இதில் 15 ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்று, பாரம்பரிய இயற்கை உணவுகளை தயாரித்து கண்காட்சியாக வைத்திருந்தனர்.

    சாத்தான்குளம்:

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகு சார்பில் வட்டார அளவிலான மகளிர் சுய உதவித்குழு பங்கேற்ற சிறுதானியஙகள் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் ரத்தசோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரசாரம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. துணை வட்டார வளச்சி அலுவலர் (சத்துணவு) பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வட்டார மேலாண்மை அலகு மேலாளர் ரோஸ்லின் வரவேற்றார். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித், பாரம்பரிய உணவு குறித்தும், அதனை மீண்டும் வீட்டில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என விளக்கி பேசினார்.

    இதில் 15 ஊராட்சி அளவிலான மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்று, பாரம்பரிய இயற்கை உணவுகளை தயாரித்து கண்காட்சியாக வைத்திருந்தனர். சிறப்பாக உணவுகளை தயாரித்த முதலூர் மகளிர் சுய உதவிக்குழு முதலிடமும், பெரியதாழை மகளிர் சுய உதவிக்குழு 2-ம் இடமும், பிடானேர ஊராட்சி மகளிர் குழு 3-ம் இடமும் பெற்று மாவட்ட அளவிலான உணவு திருவிழாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர். விழாவில் உதவி திட்ட அலுவலர்கள் கனகராஜ், அருண்பிரசாத், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னத்துரை, உதவி பொறியாளர் கீதா, இளநிலை உதவியாளர் இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டல் ஜெயா நன்றி கூறினார்.

    ×