என் மலர்

  நீங்கள் தேடியது "Torch Light Review"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அப்துல் மஜித் இயக்கத்தில் சதா - ரித்விகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `டார்ச் லைட்' படத்தின் விமர்சனம். #TorchLightReview #Sadha
  ரித்விகாவுடன் இணைந்து நெடுஞ்சாலையில் விபச்சார தொழில் செய்து வருகிறார் நடிகை சதா. ஒருநாள் பேருந்தில் செல்லும் போது தன்னை உரசும் ஒருவருக்கு சதாவை தக்க பதிலடி கொடுக்கிறார். இதையடுத்து தைரியமாக செயல்படட்ட சதா மீது அவருக்கு காதல் வந்துவிடுகிறது. இதையடுத்து அவளை திருமணம் செய்ய முடிவு செய்து, சதாவிடம் தனது காதலையும் வெளிப்படுத்துகிறார். ஆனால், சதா அவரது காதலை ஏற்க மறுக்கிறார். 

  இதற்கிடையே சதா விபச்சாரத்தில் ஈடுபடுவது, அவருக்கு தெரிய வருகிறது. இருப்பினும் விபச்சார தொழிலை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவர் வற்புறுத்த, தனக்கு திருமணம் ஆன உண்மையை சதா அவரிடம் தெரிவிக்கிறாள். தான் ஒரு நல்ல குடும்பத்து பெண் என்றும், தனக்கு திருமணம் ஆனதையும், திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் முதலாளி தன்னை அடைய நினைத்ததையும், அவருடன் தனது கணவர் சண்டை போட்டதையும் விவரிக்கிறாள். 

  இந்த நிலையில், ஒருநாள் தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட, அவரை காப்பாற்ற தனது தோழி ரித்விகாவின் உதவியுடன் தான் விபச்சார தொழிலுக்கு வந்ததாகவும் கூறுகிறாள்.  மறுபுறம் உடல்நலம் பெற்று திரும்புகிறார் சதாவின் கணவர். இந்த நிலையில், தன்னை காப்பாற்ற சதா விபச்சார தொழிலில் ஈடுபட்டது அவருக்கு தெரிய வருகிறது. இதனால் மனவேதனைக்குள்ளாகும் அவர் சதாவை விட்டுபிரிய முடிவு செய்கிறார். 

  கடைசியில் தனது கணவரை காப்பாற்ற தன்னையே அர்பணித்த சதாவின் வாழ்க்கை என்ன ஆனது? சதாவின் கணவர் அவளை ஒதுக்கிவிட்டாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

  நீண்ட இடைவேளைக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க வந்திருக்கும் சதா, முற்றிலும் வித்தியாசமான, அழுத்தமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். நெடுஞ்சாலைகளில் விபச்சார தொழிலில் ஈடுபடும் கதாபாத்திரத்தில் சதா, ரித்விகா என இருவரது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மற்ற கதாபாத்திரங்கள் அனைவருமே கதையின் போக்குக்கு ஏற்ப படத்தோடு ஒன்றி நடித்திருக்கின்றனர்.  வேறு வழியில்லாமல் விபச்சார தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள், அவர்களது வாழ்க்கையின் மறுபக்கம், அந்த வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் என அவர்களுக்கான விழிப்புணர்வை ஏற்படும்யடியாக உண்மை கதையை மையப்படுத்தி படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அப்துல் மஜித். படத்தில் வசனங்கள் அவர்களது வாழ்க்கையின் வலிகளை பிரதிபலிப்பதாக உள்ளன. படத்தில் தனது கணவனை காப்பாற்ற மனைவி தவறான வழியில் செல்கிறாள் என்பதை அறியும் கணவன் மற்றும் கணவன் முன்னாலேயே மனைவியை பலர் வர்ணிப்பது போல காட்சிகள் நெருடலாக உள்ளது. 

  கணவன் முன்பே மனைவியை மற்றவர்கள் வர்ணித்து பேசுவது அந்த கணவனுக்கு, இறப்பை விட பெரிய வலியை கொடுக்கும் என்பதை படமாக இயக்கியிருக்கிறார். படத்தின் முடிவு ஏற்கும்படியாக இல்லை.

  ஜே.வி.யின் பின்னணி இசை படத்திற்கு பலம் தான். சக்திவேலின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஓரளவு திருப்தியாக வந்துள்ளது. 

  மொத்தத்தில் `டார்ச் லைட்' தூக்கிப்பிடிக்கப்பட வேண்டும். #TorchLightReview #Sadha #Riythvika

  ×