என் மலர்
நீங்கள் தேடியது "Tollgate worker attack"
மதுரை அருகே டோல்கேட் ஊழியரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டார்.#arrest
மதுரை:
மதுரை சோளங்குருணியைச் சேர்ந்தவர் பாரதி மாயாண்டி (வயது 34). மதுரை அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார் பத்தி சுங்கச்சாவடியில் (டோல்கேட்) பாதுகாவலராக உள்ளார். நேற்றிரவு இவர் பணியில் இருந்தார்.
அப்போது பாரபத்தியைச் சேர்ந்த முருகன் (38), மணி (36) ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் தவறான பாதையில் வந்தனர்.
நீங்கள் அந்த பாதை வழியாக செல்லுங்கள் என்று பாரதி மாயாண்டி சொன்னார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது முருகனும், மணியும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த பாரதி மாயாண்டி இது தொடர்பாக கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து முருகன், மணி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






