search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN assembly team"

    • கொடைக்கானலில் சட்டமன்ற பேரவை குழுக்கள் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
    • சட்டமன்ற பேரவை குழுக்கள் ஆய்வு

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் சட்டமன்ற பொது நிறுவன ங்கள் குழு அதன் தலைவர் ராஜா தலைமையில் ஆய்வு மேற்கொண்டது.

    கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரி , நட்சத்திர ஏரி, ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, கொடைக்கானல் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. தாட்கோ பயனாளிகளிடம் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், காதர்பாட்சா, கிருஷ்ணசாமி, தமிழரசி, தளபதி, நாகை மாலி, நிவேதா முருகன், மனோகரன், ஜெயக்குமார், ஆகியோர் பங்குபெற்றனர்.

    பின்னர் நிருபர்களுக்கு குழுவின் தலைவர் ராஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கொடைக்கானலில் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தோம். குறிப்பிட்ட சில மருந்துகள் தனியாரிடமிருந்து பெற்று நோயாளிகளுக்கு நிர்வாகம் வழங்கி வருகிறது. ஆஸ்பத்திரியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    நட்சத்திர ஏரி மாசுபடாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டு–ள்ளது. கொடைக்கானல் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படும் பெண்கள் விடுதி மிக மோசமான நிலையில் உள்ளது. இதை புதுப்பிப்பதற்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இந்த பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாட்கோ மூலம் கடன் பெற மனு செய்தவர்களுக்கு உடனடியாக கடன் வழங்குவதற்கு மாவட்ட கலெக்டருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்துஸ்தான் யூனி லீவர் நிறுவனம் பகுதியில் மெர்குரி தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறை படி தூய்மை பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இங்கு அகற்றப்பட்ட மரங்களை விட கூடுதல் மரங்கள் நடுவதற்கு உத்தரவிட–ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ஆய்வின்போது திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன், கொடைக்கானல் ஆர்.டி.ஓ. முருகேசன் உள்ளிட்ட‌ பல‌ர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

    ×