என் மலர்
நீங்கள் தேடியது "Tiruvottiyur motor cycle fire"
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் சக்திகணபதி 2-வது தெருவில் வசித்து வருபவர் சங்கர்கணேஷ். தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று இரவு அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு குடும்பத்துடன் தூங்கினார். நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சங்கர் கணேசின் மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது மனைவியின் மொபட்டை தீ வைத்து எரித்தனர்.
இதில் 2 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதேபோல் அருகில் உள்ள சண்முகம் தெருவில் கொத்தனார் கணேசன் வீட்டு முன்பு நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கலைஞர் நகரில் ஒரு மோட்டார் சைக்கிளும் தீவைத்து எரிக்கப்பட்டது.
அடுத்தடுத்து 5 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் தீவைத்து எரித்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






