என் மலர்
நீங்கள் தேடியது "tirupur train flowing"
திருப்பூர்:
தேனி மாவட்டம் போடி அம்மாபட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது 29). திருப்பூர் ஆயுதப்படையில் போலீஸ்காராக வேலைபார்த்து வந்தார்.
இவரது மனைவி ரமா (25). இந்த தம்பதிக்கு 6 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் திருப்பூர் பூலுவப்பட்டி பகுதியில் தனியே அறை எடுத்து தங்கி மோகன் பணிக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று திருப்பூர் - வஞ்சிபாளையம் இடையே வந்த ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே மோகன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்திபோது, கடன் தொல்லையால் போலீஸ்காரர் மோகன் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






