என் மலர்
நீங்கள் தேடியது "Tirupati Trains"
- 13-ந் தேதி வரை அமல்
- அதிகாரிகள் தகவல்
வேலூர்:
தெற்கு ரெயில்வேயில் குண்டக்கல் டிவிஷனில் ரயில் பாதை பராமரிப்பு பணிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனால் விழுப்புரம் திருப்பதி இடையிலான முன் பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து அதிகாலை 5.30 மணி அளவில் புறப்பட்டு திருவண்ணா மலை, போளூர், ஆரணி, வேலூர் கண்டோன்மென்ட், காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் இந்த ரயில் காட்பாடி உடன் நிறுத்தப்படுகிறது. அதேபோல் மறு மார்க்கத்தில் திருப்பதியில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு பாகாலா, சித்தூர், காட்பாடி, வேலூர் கண்டோன்மென்ட் வழியாக விழுப்புரம் செல்லும் ரெயிலும் காட்பாடியில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மாலை 4.40 மணிக்கு திருப்பதிக்கு மீண்டும் திரும்பி புறப்பட்டு செல்லும்.
இந்த போக்குவரத்து மாற்றம் நேற்று தொடங்கி வரும் 13-ந் தேதி வரை அமலில் உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.






