search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruchendur Subramaniya Swamy Temple"

    • சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
    • உண்டியல் எண்ணும் பணியில் இந்து சமய அறநிலைத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர், திருச்செந்தூர் ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாதாந்திர உண்டியில் எண்ணிக்கை நேற்று காவடி பிறை மண்டபத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில் கோவில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

    சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    அதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ. 3 கோடியே 10 லட்சத்து 40 ஆயிரத்து 666-ம், கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ. 19,221, யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ. 8,093, மாசித் திருவிழா தற்காலிக உண்டியல் மூலம் ரூ. 2 லட்சத்து 16ஆயிரத்து 637-ம், தங்கம் 1 கிலோ 780 கிராம், வெள்ளி 38 கிலோ 109 கிராம், பித்தளை 70 கிலோ 860 கிராம், செம்பு 3 கிலோ 500 கிராம், தகரம் 20 கிலோ 686 கிராம் மற்றும் அயல் நோட்டு 292-ம் இருந்தது.

    உண்டியல் எண்ணும் பணியில் இந்து சமய அறநிலைத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வாளர் செந்தில் நாயகி, ஆய்வாளர் பகவதி, பொதுமக்கள் பிரதிநிதி வேலாண்டி ஓதுவார், அயல் பணி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×