search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tipper truck accident"

    • 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவதி
    • அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மகிமண்டலம் பகுதியில் சென்னையில் இருந்து சேலம் வரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

    சாலை அமைக்கும் பணிக்காக மகிமண்டலம் ஏரியிலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் மண் ஏற்றி வந்து சாலை அமைக்கும் பணிக்காக கொட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் இரவு மண் ஏற்றி வந்த லாரி மண்ணை கொட்டி விட்டு லாரியின் பின்புறம் இருக்கும் தொட்டியை கீழே இறக்காமல் அப்படியே டிரைவர் லாரியை இயக்கி உள்ளார்.

    அப்போது சாலையில் இருந்த மின் கம்பிகள் அந்த லாரியின் தொட்டியில் சிக்கியது. இதில் 22 மின்சார கம்பங்கள் இழுத்து வரப்பட்டு உடைந்து கீழே சாய்ந்ததால் மகிமண்டபம், பெரிய போடி நத்தம், புதூர் கிராமம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதனால் அந்த கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இரவில் மூழ்கியது.

    இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மண் ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகளை சிறை பிடித்துள்ளனர்.

    மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளான அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் குறித்து மின்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தகவல் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறினர்.

    மேலும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். உடனே அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×