என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thriving algal bloom"

    • ஆங்காங்கே மானாவாரி பயிர்களான கம்பு, சோளம். பாசிப்பயிறு, உளுந்து, துவரை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை மழையை நம்பி சாகுபடி செய்தனர்.
    • அவ்வாறு சாகுபடி செய்த பயிர்களில் பாசிப்பயிர் செடிகள் தற்போது பெய்த மழையால் நன்றாக விளைந்துள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள கிராமங்களில் மிளகாய் பட்டி, ஆண்டிபட்டி, பிள்ளையார் நத்தம், குரும்பபட்டி, மைக்கேல் பாளையம், செம்பட்டி என். ஊத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பெய்த மழையின் எதிரொலியாக விவசாயிகள் உளவடைப்பணியை தொடங்கி ஆங்காங்கே மானாவாரி பயிர்களான கம்பு, சோளம். பாசிப்பயிறு, உளுந்து, துவரை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை மழையை நம்பி சாகுபடி செய்தனர்.

    அவ்வாறு சாகுபடி செய்த பயிர்களில் பாசிப்பயிர் செடிகள் தற்போது பெய்த மழையால் நன்றாக விளைந்துள்ளது. பச்சை பசேலென்று அறுவடைக்கு தயாராகும் நிலையில் நன்றாக விளைந்துள்ளது.

    இதனால் பாசிப்பயிர் சாகுபடி செய்து விவசாயிகள் இந்தாண்டு நிச்சயமாக நல்ல மகசூல் கிடைக்கும் என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

    ×