என் மலர்
நீங்கள் தேடியது "three storey building collapse"
மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டியில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும் 6 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். #BuildingCollapse
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பிவண்டி பகுதியை சேர்ந்த ரசூல்பாக் என்ற இடத்தில் நேற்று இரவு மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டதாக முதல் கட்டமாக தெரிவித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து 6 பேரை உயிருடன் மீட்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பரிதாபமாக பலியானார் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். #BuildingCollapse
மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டியில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் மீட்கப்பட்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. #building collapse
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பிவண்டி பகுதியை சேர்ந்த ரசூல்பாக் என்ற இடத்தில் இன்று இரவு மூன்று மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து 3 பேரை உயிருடன் மீட்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ள 5 பேரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். #building collapse






