search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thottanoothu refugee camp"

    • இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் ஆகியற்றையும், பூங்கா மற்றும் நுாலகம் அமைக்கப்படவுள்ள இடங்களையும் அவர் ஆய்வு செய்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம், தோட்டனுாத்து கிராமத்தில் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட பணிகளை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மாவட்ட கலெக்டர் விசாகன், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) தினேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    தோட்டனுாத்து கிராமத்தில் புதியதாக இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு 321 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வீடுகள் கட்டுமான பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்ற வருகின்றன.

    ரூ.15.89 கோடி மதிப்பீட்டில் 321 வீடுகள் கட்டும் பணிகள், ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் மற்றும் பைப்லைன் அமைத்தல், ரூ.20.87 லட்சம் மதிப்பீட்டில் 420 மீட்டர் துாரம் தார்ச்சாலை அமைத்தல், ரூ.66.21 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை, ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மின்கம்பங்கள் நடுதல் மற்றும் தெரு விளக்குகள் அமைத்தல் என மொத்தம் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    வீடுகளுக்கு வர்ணம் பூசுதல், குடிநீர் தெரு குழாய்கள் பொருத்துதல், கழிவுநீர் உறிஞ்சி தொட்டிகள், வீடுகளில் மின் இணைப்பு பணிகள், தெரு விளக்குகள் அமைத்தல் போன்ற இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளைஅமைச்சர் பார்வையிட்டார்.

    மேலும், மறுவாழ்வு முகாம் பகுதியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி, ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் ஆகியற்றையும், பூங்கா மற்றும் நுாலகம் அமைக்கப்படவுள்ள இடங்களையும் அவர் ஆய்வு செய்தார்.

    ×