என் மலர்
நீங்கள் தேடியது "This yag which started last 14th continues"
- நவராத்திரி பூஜை முன்னிட்டு நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
வேலூர்:
காட்பாடி கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம், காமாட்சி அம்மன் சமேத மகாதேவ மலை கோவிலில் நவராத்திரி பூஜை முன்னிட்டு, மகா யாகம் நடந்தது.
இதையொட்டி மகா தேவமலை சாமி, காமாட்சி அம்மன், விநாயகர், குருதட்சணா மூர்த்தி, முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சாமி சன்னதிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பூஜையை மகானந்த சித்தர் தொடங்கி வைத்தார்.
கடந்த 14-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த யாகம் தொடர்ந்து நடந்து வருகிறது.
யாக பூஜையில் அமைச்சர் துரைமுருகன், துரை சிங்காரம், மகானந்த சித்தர் கல்வி அறக்கட்டளை தலைவர் பாஸ்கர், தொழில் அதிபர்கள் ஸ்ரீராம், அனு ரெட்டி, வக்கீல் முனிசாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






